விமான நிலையத்தில் பரபரப்பு!! 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!!

திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் விமான சேவைகள் இயக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெளி நாடுகளுக்கு தங்கம் கடத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இவற்றை தடுக்கும் விதத்தில் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று இரவு அதிகளவில்  திருச்சி விமான நிலையத்தில்  தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்தவர்களிடம் சோதனை நடத்தினர்.

அப்போது 55 பேரிடம் 200 முதல் 500 கிராம் வரை மொத்தமாக 11 கிலோ தங்கம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment