Connect with us

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

rain 5

தமிழகம்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றைய தினத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் கோவை, தேனி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

மேலும் லட்சத்தீவு பகுதி, கர்நாடகா, கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதி கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top