11 மாவட்டங்கள் ஆனால் 10 கண்காணிப்பு அதிகாரிகள்! அரசாணை வெளியீடு;

இந்தாண்டு எதிர்பாராவிதமாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. அதனை தூர்வாரும் பணியில் அதிகாரிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 வடகிழக்கு பருவமழை

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்து கண்காணிக்க புதிதாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியாகி உள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் அருண் ராய்,திருச்சி மாவட்டத்தில் ஜெயகாந்தன், வேலூர் மாவட்டத்தில் நந்தகுமார், நாகை மாவட்டத்தில் பஸ்கரன் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் வெங்கடேஷ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் செல்வராஜ், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆனந்த குமார் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

அரியலூர், பெரம்பலூர் ஆகிய இரண்டு மாவட்டத்திற்கும் ஒரே கண்காணிப்பு அதிகாரியாக அனில் மேஷ்ராம் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் காமராஜ், ஈரோடு மாவட்டத்தில் பிரபாகரன் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மழை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் அதிகாரிகள் ஈடுபடுவர் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment