11 நாட்கள் தடை: நாட்டுமக்கள் சிரிக்க, மது அருந்த, பிறந்தநாள் கொண்டாடத் தடை!

ஒவ்வொரு நாடும் தன் நாட்டு மக்களுக்கு என்று புதுப்புது உத்தரவுகளை விதிக்கும். இதில் பலரும் ஆச்சர்யப்படும் வகையிலான உத்தரவை வடகொரிய அதிபர் விதித்துள்ளார். அதன்படி வடகொரியாவில் 11 நாட்களுக்கு நாட்டுமக்கள் மது அருந்தவோ,சிரிக்கவோ, பிறந்தநாள் கொண்டாடவோ கூடாது என்று கூறினார்.

 கிம் ஜான்

ஏனென்றால் வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் அந்நாட்டின் துக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இவர் வடகொரியாவை 1994 முதல் டிசம்பர் 17 2011 வரைக்கும் ஆட்சி செய்தார். இவரே வடகொரியா நாட்டை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரது மூன்றாவது தலைமுறை ஆட்சி செய்கிறது. இந்த நிலையில் இவரது மறைவு தினத்தை தேசிய துக்க நாளாக கருதி நாட்டு மக்கள் 11 நாட்களுக்கு அனுசரிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த துக்க காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இருந்தால் சத்தமாக அழ கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment