இளையராஜாவின் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள் பாகம் 11

நாகார்ஜூன் அமலா நடிப்பில் கடந்த 1989ம் ஆண்டு வெளிவந்த படம் உதயம். இதன் ஒரிஜினல் வெர்ஷன் தெலுங்கு திரைப்படமாகும். தெலுங்கில் இப்படம் சிவா என வந்தது.

eae633a5a8388a17f01ea6dd54b1e484-1

ராம்கோபால் வர்மா அந்த நேரத்தில் புகழ்பெற்ற இயக்குனராக வலம் வந்த நேரம். அவர் இயக்கிய படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் வெற்றியை கொடுத்தது.

நாகார்ஜூன், அமலா, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள், கல்லூரி வாழ்க்கை முறை, ரவுடிகளின் அட்டகாசம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இப்படம் வந்திருந்தது.

இப்படத்தின் பாடல்கள் தமிழ் , தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஹிட் ஆனது.

இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு இசைஞானி இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும். அதனால் இசைஞானியையே தனது பெரும்பாலான படங்களுக்கு இசையமைக்க வைத்திருப்பார் இந்த படத்தில் ராம்கோபால் வர்மா , இளையராஜா கெமிஸ்ட்ரி அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும்.

இந்த படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் நீண்ட நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பாடல்கள் தமிழில் ஹிட் ஆனது. ஆடல்களோ பாடல்களோ ஆசைகள் தீராதோ, அச்சச்சோ பெண்மை, பாட்டனி சாங் என பாடல்கள் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஹிட் ஆனது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...