News
10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் குளறுபடி: விசாரணைக்கு உத்தரவு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த தேர்வு முடிவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் இதனை அடுத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. இந்த முடிவில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் காலாண்டு அரையாண்டுத் தேர்வில் ஒரு பாடத்தில் தேர்வு எழுதாத மாணவர் கூட தேர்ச்சி வழங்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு ஆப்சென்ட் என்று குறிப்பிடப்பட்டதாவும் தகவல்கள் வெளியானது
இதனை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்ச்சி வழங்காததால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும்மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்
இந்த கோரிக்கையை ஏற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு குளறுபடி தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் விரைவில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
