ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘Practical’…! தனித்தேர்வர்களும் கலந்து கொள்ளலாம்!!
நம் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வு மே இரண்டாம் தேதி தொடங்குகிறது. இதனால் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது.
அதன்படி ஏப்ரல் 25ம் தேதி முதல் தமிழகத்தில் 10 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது செய்முறை தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு தனி தேர்வர்களுக்கு அனுமதி வழங்க பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி ஆகிய 3 தேதிகளில் பொது செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு தனித்தேர்வர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
