Connect with us

மீண்டும் அதிர்ச்சி!! 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி!!

208695 girlsuicide 1

தமிழகம்

மீண்டும் அதிர்ச்சி!! 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பகுதியில் வசித்து வருபவர் சரவண கண்ணன். இவரது மகள் யாஷியா. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதற்கிடையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த யாஷிகா தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கழிவறைக்குள் சென்று பிளேடால் தனது கையை அறுத்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த சக மாணவிகள் ஆசிரியரிடம் சொல்ல போகும் போது பிரச்சனை மேலும் அதிகரித்து விடுமோ? என்ற அச்சத்தில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த காக தெரிகிறது. இதனால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆசிரியர்கள் மாணவியை திருகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிகிறது. பிறகு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top