10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு

75da62da31cb612b9c2c503b7a726611

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை இன்று முதல் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியாகும் என்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பிறந்த நாள், மற்றும் பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியலை வைத்து மாணவர்கள் 11ஆம் வகுப்பு அல்லது பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்ய தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment