நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.. ஹிஜாப் அணிந்து வந்தால் தேர்வு எழுத அனுமதி இல்லை.!

கர்நாடகாவில் உள்ள குந்தாபுரா அரசுக் கல்லூரியில் சீருடையைத் தவிர வேறு எந்தவொரு உடையினையும் மாணவர்கள் அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்து வருவோர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி கிடையாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் அணியும் பிரச்சினையானது தற்போது உலக அளவில் பேசப்படும் பிரச்சினையாக உருவெடுத்தது நாம் அறிந்ததே.

மாநில அரசு விதித்த இந்த தடையினை ஆதரிக்கும் வகையில் பெங்களூரு நீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தைக் காட்டும் ஆடைகளை அணியக் கூடாது என்று தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் நாளை 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளது. இந்தப் பொதுத்தேர்வில் பங்கேற்போர்கள் சீருடையை மட்டும் அணிந்து வர வேண்டும் என்று கர்நாடக மாநில அரசின் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஹிஜாப்பை அணியாமல் வரவேண்டும் என்ற உத்தர்வினால் பொதுத்தேர்வை எழுதாமல் புறக்கணித்தால் மறுதேர்வு கிடையாது என்று மந்திரி பி.சி.நாகேஸ் திட்டவட்டமாகக் கூறியும் உள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews