10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு : உற்ச்சாகத்தில் மாணவர்கள் !!

கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டிலும் பொதுத்தேர்வுகள் தொடங்குமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்  மே 6 ஆம் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்கியது.

இதனிடையே பள்ளி மாணவர்கள் உற்ச்சாகமாக தேர்வுகள் எழுதினர். இந்த சூழலில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று காலை சுமார் 10.15 மணிக்கு தொடங்கிய சமூக அறிவியல் பாடத்தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிந்தது. தேர்வு முடிந்ததும் சில மாணவர்கள் செல்பி எடுத்தல் , மை தெளித்தல், செல்போன் நம்பர் ஷேர்செய்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும், தற்போது நிறைவுப்பெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment