நாளை 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் !

தமிழகத்தில் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும் வெளியிடப்படும்.

மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in போன்ற இணையதளங்களில் முடிவுகளைப் பார்க்கலாம்.

மேலும் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்து எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிவுகளைப் பெறலாம். கூடுதலாக, முடிவுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையங்கள் (NICs), அதன் கிளை அலுவலகங்கள் மற்றும் அரசு நூலகங்களில் பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் 4,025 மையங்களில் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பொது தேர்வு நடை பெற்றது குறிப்பிடத்தக்கது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

மொத்த எண்ணிக்கையில், 5.01 லட்சம் மாணவர்கள் ஆண்கள், 4.75 லட்சம் மாணவர்கள் பெண்கள் மற்றும் ஐந்து பேர் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம் உறுதி

மேலும் 14 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.