10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !!
10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவோர் காண வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் வினாத்தாள் இருக்கும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதில் செயல்பாட்டில் இருக்க வேண்டுமென கூறியுள்ளது.
வினாத்தாள் மையங்களில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை பூட்டு போட்டுக்கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளுக்கு புறம்பாக தேர்வுப்பணி அலுவர்களை நியமிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பொதுத்தேர்வு முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கக் கூடாது என கூறியுள்ளது.
தேர்வறை கண்காணிப்பாளராக தேர்வு நடைபெறும் பாடத்திற்கான ஆசிரியர்களாக இருக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களை மட்டும் தேர்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
