நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் 10 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்?

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வித்துறை அனைத்து பல்வேறு விதமான கவனத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உயர் கல்வித்துறையின் சார்பில் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளும் விளையாடப்பட்டு வருகிறது.

அந்த படி தமிழ்நாட்டில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சட்டப்பேரவையில் தமிழகத்தின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் 10 அரசு கலைக் கல்லூரிகள் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆகிய பகுதிகளில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் புதிய கல்லூரிகள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புதிய கல்லூரிகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்த புதிய பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment