Connect with us

அறங்காவலர் காலியிடங்கள் நிரப்புதல்-அறிக்கை தர ஆணை! மனுதாரர் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்;

கோவில்

செய்திகள்

அறங்காவலர் காலியிடங்கள் நிரப்புதல்-அறிக்கை தர ஆணை! மனுதாரர் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்;

அறங்காவலர் காலியிடங்கள் நிரப்புதல்-அறிக்கை தர ஆணை! மனுதாரர் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்;

திமுக ஆட்சிக்கு பின்பு அறநிலையத்துறை மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. இதனால் அறநிலை துறை அமைச்சராக சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அறநிலையத் துறையில் உள்ளவர்களுக்கு நாள்தோறும் புதிய அறிவிப்புகளை தமிழக அரசு அளித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு அறங்காவலர் காலி இடங்கள் குறித்த அறிக்கை தர உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதன்படி அறநிலையத்துறையின் கோயில்களில் அறங்காவலர் காலியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறை குறித்து விரிவான அறிக்கை தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர் நியமனத்தை கண்காணிக்க அதிகாரிகள் குழுவை அமைக்க கோரி ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடுத்தார்.

கோயிலை நிர்வாகிக்க அறநிலையத் துறை அதிகாரிகளை நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் 97% கோயில்களில் அறங்காவலர்கள் இல்லை என்றும் மனுதாரர் கூறினார். பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த அறங்காவலர் பணியிடங்களை நிரப்ப தற்போதைய அரசு முன்வந்துள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர்.

அறங்காவலர் பதவி காலம் முடிந்த 6 மாவட்டங்களில் மீண்டும் குழு அமைக்கப்பட்டு உள்ளன என்றும் அரசு கூறியுள்ளது. அறங்காவலர் பணி காலியிடங்களை நிரப்பும் வரை மனுதாரர் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top