Connect with us

வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வியாழக்கிழமை ஆறு மணியோடு பரப்புரை செய்யக்கூடாது-மாநில தேர்தல் ஆணையம்;

201912061158438461 Tamilnadu Election Commission announces new announcement SECVPF

தமிழகம்

வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வியாழக்கிழமை ஆறு மணியோடு பரப்புரை செய்யக்கூடாது-மாநில தேர்தல் ஆணையம்;

வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வியாழக்கிழமை ஆறு மணியோடு பரப்புரை செய்யக்கூடாது-மாநில தேர்தல் ஆணையம்;

நம் தமிழகத்தில் சூடு பிடித்துக் கொண்டு காணப்படுகிறது தேர்தல் களம். ஏனென்றால் பல ஆண்டுகளுக்குப் பின்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நம் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனால் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் அதிதீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக தேர்தல் பரப்புரை இரவு 10 மணிவரை செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு பலரும் மக்களை கவரும் விதமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் பரப்புரை பற்றி சில முக்கிய அறிவிப்பு ஒன்றை கூறியுள்ளது. அதன்படி பிப்ரவரி 17 வியாழக்கிழமை அன்று ஆறு மணிக்குள் பரப்புரையை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் பரப்புரையை வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் முடிப்பதை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகர் உறுதிசெய்க என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top