பரபரப்பு..!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்..
கர்நாடகாவில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் இந்த விவகாரம் உலக அளவில் பெரும் விஸ்வரூபத்தை எடுத்தது.
இதன் காரணமாக அங்கு உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வகையில் இன்று முதல் உயர்நிலை பள்ளிகளை திறக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இதில் ஹிஜாப் அணியாமல் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் இல்லையென்றால் அனுமதிக்கப்படாது என ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களிடம் கூறியதால் ஹிஜாப் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.
