Connect with us

குஜராத்தில் 108 அடி அனுமன் சிலை…!! ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை?

hanuman statue

செய்திகள்

குஜராத்தில் 108 அடி அனுமன் சிலை…!! ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை?

குஜராத்தில் 108 அடி அனுமன் சிலை…!! ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை?

இன்றைய தினம் அனுமன் ஜெயந்தி இந்தியாவுக்கும் கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் 108 அடி அனுமன் சிலையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர் தெற்கில் ராமேஸ்வரம் மற்றும் கிழக்கிலும்  மேற்கு வங்கத்தில் அனுமன் சிலை நிறுவும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். இந்தியாவின் நான்கு திசைகளிலும் அனுமன் சிலை நிறுவ வேண்டும் என்ற முடிவு செய்துள்ள மத்திய அரசு முதல் கட்டமாக வடக்கில் அனுமன் சிலையை 2018ஆம் ஆண்டு சிம்லாவில் நிறுவியது.

அதனைத் தொடர்ந்து மேற்கில் இன்றைய தினம் குஜராத்தில் அனுமன் சிலை திறக்கப்பட்டது. இதேபோல் தெற்கிலும் ராமேஸ்வரத்திலும் கிழக்கிலும் மேற்கிலும் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளது.

சுமார் 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த செலவை தொடர்பாக பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து இன்றைய தினம் அனுமன் ஜெயந்தி என்பதால் சிலை திறந்து வைக்கப்பட்டது.

அப்போது மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் அனுமன் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்தார். நல்ல நேரத்தில் அனுமனின் இந்த பிரமாண்ட சிலை திறக்கப்பட்டுள்ளது என்றும் நாடு மற்றும் உலக முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top