கன்னியாஸ்திரிகளை அவதூறாக பேசிய ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் கைது!

இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது மதக்கலவரம் தான். ஏனென்றால் ஆங்காங்கே மத கலவரங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு சமூகத்தினரை மற்ற சமூகத்தினரை தாக்குவதும் இப்படி பல வன்மையான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது.

இருப்பினும் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக திகழ்ந்து வருகிறது. நம் தமிழகத்தில் தஞ்சை பள்ளி மாணவி உயிரிழந்ததை மதமாற்றம் என்ற சாயத்தை பூச போலியான ஆவணங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கன்னியாஸ்திரிகளை அவதூறாக பேசிய ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி கன்னியாஸ்திரிகளை மிரட்டிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் கணேஷ் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாஸ்திரிகளை தகாத வார்த்தைகளால் திட்டி வாகனத்தை பறித்த வழக்கில் கணேஷ் பாபு கைது செய்யபட்டுள்ளார். கன்னியாஸ்திரிகளிடமிருந்து இருசக்கர வாகனம், கைபேசியை பறித்த கணேஷ் பாபு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கணேஷ் பாபுக்கு உடந்தையாக இருந்த 20 ஆர்எஸ்எஸ்  உறுப்பினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment