Connect with us

உக்ரைனில் இருந்து இதுவரை 10400 இந்தியர்கள் மீட்பு…!! 24 மணி நேரத்தில் 16 விமானங்கள் இயக்கப்படும்!

indians ukraine 4

News

உக்ரைனில் இருந்து இதுவரை 10400 இந்தியர்கள் மீட்பு…!! 24 மணி நேரத்தில் 16 விமானங்கள் இயக்கப்படும்!

உக்ரைனில் இருந்து இதுவரை 10400 இந்தியர்கள் மீட்பு…!! 24 மணி நேரத்தில் 16 விமானங்கள் இயக்கப்படும்!

இன்று காலை மத்திய அரசு உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. இன்னும் உக்ரைன் நாட்டில் சுமார் 7 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பதாகவும் கூறியிருந்தது.

இதனால் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி உள்ளது. அதன் ஒரு கட்டமாக 130 ரஷ்ய பேருந்துகள் இயக்க உள்ளதாக அறிவித்திருந்தது. இந்தநிலையில் உக்ரேனில் இருந்து இதுவரை 10400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியர்களை மீட்க 24 மணி நேரத்தில் உக்ரைனில் அண்டை நாடுகளுக்கு 16 விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது. கார்கிவ் நகரில் சில இந்தியர்கள் தற்போது 5 பேருந்துகள் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கார்கிவ் நகரில் 300 மாணவர்களும் சுமி பகுதியில் 700 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அதிலும் தற்போது சுமி பகுதியில் சிக்கியுள்ள மாணவ மாணவிகள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் தண்ணீர், மின்சார வசதி இல்லாமல் சிக்கி தவிப்பதாகவும் வீடியோவில் பதிவிட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top