செய்திகள்
திருத்தணியில் 102 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்!
தற்போது நம் தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற சூழ்நிலை அதிகமாக காணப்படுகிறது. காரணம் என்னவெனில் தமிழகத்தில் ஊழலின் தாக்கமானது அதிகமாக காணப்படுகிறது மேலும் சில மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்தில் இலவசப் பொருட்களை அதற்கான சான்றிதழ்களை வாங்குவதற்குக் கூட லஞ்சம் கொடுக்கும் அவலமான நிலை உள்ளது குறித்து தங்களது கருத்தினை தெரிவித்தனர். மேலும் தற்போது தமிழகத்தில் ஏதேனும் ஒன்று தேவை என்றால் அதற்கு லஞ்சம் கொடுக்கும் நிலை மட்டுமின்றி ஊழலும் அதிகமாக நடைபெறுகிறது.
இது நம் மாநிலத்திற்கு மிகவும் பாதிப்பை உருவாக்கும் என்றே கூறலாம். மேலும் அவ்வப்போது ரேஷன் கடைகளில் உள்ள அரிசியானது ஆவணம் இன்றி பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் தெரிகிறது. ஆனால் காவல்துறையினர் அவர்களை துல்லியமாக கணித்து பிடித்துக் கொள்கின்றனர். மேலும் தற்போது இதுபோன்ற சம்பவம் மீண்டும் நம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. அதன்படி திருத்தணியில் இருந்து 102 டன் மதிப்பிலான நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆவணம் இன்றி 4 லாரியில் கொண்டு சென்ற 102 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவை உரிய ஆவணம் இன்றி ஆந்திரா எடுத்து சென்ற நெல்மூட்டைகள் என்பது தெரியவந்துள்ளது மேலும் அவற்றை பொன் பாடி சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்தனர்.
