கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பொதுத்தேர்வு சரிவர நடத்தப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகவே காணப்பட்டது.
இதன் விளைவாக பல இடங்களில் ஆன்லைன் தேர்வுகளும் ஆல் பாஸ் முறையும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு இருக்காது என்று கூறப் படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேரடி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் 10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும் நேரடி முறையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு வெளியிடுகிறார் தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதுகுறித்த அறிவிப்பு நாளை காலை அமைச்சர் தலைமைச் செயலகத்தில் வெளியிடுகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்தகைய தகவல் கிடைத்துள்ளது.