2019 ஆம் ஆண்டு யாராலும் மறக்க முடியாத ஆண்டாக காணப்படுகிறது. ஏனென்றால் அப்போதுதான் உலகில் கொரோனா நோயின் தாக்கம் முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் ஆங்காங்கே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக 610 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக மருத்துவத் துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 606 இல் இருந்து 610 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 602 மற்றும் வெளிநாடுகளில் வந்த 8 பேர் உள்ளிட்ட 610 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டன.
ஒரு லட்சத்து 254 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 610 பேருக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பதாக உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் புதிதாக 171 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்றும் தமிழக மருத்துவத் துறை கூறியுள்ளது.
சென்னையில் ஏற்கனவே 165 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 171 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இருப்போரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 629 ஆக குறைந்துள்ளது. கொரோனாவில் இருந்து 679 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27 லட்சத்து 673 டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.