வாகன ஓட்டிகளே உஷார்!! ஆம்புலன்ஸ்-க்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம்!!

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் என்றும் தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல்.. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்!!!

இவற்றை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் போக்குவரத்து விதிமீறல்களின் படி, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment