தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள்: அரசாணை வெளியீடு!!

தமிழகத்திற்கு 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக ரூ.420 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் மாநகப் போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றை தவிர்த்து மற்ற கோட்டங்களுக்கு ரூ.420 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோகுல் ராஜ் கொலை வழக்கு: சுவாதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

இந்நிலையில் ஒரு பேருந்திற்கு ரூ.42 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதன் படி சேலம் மாவட்டத்திற்கு 100 பேருந்துகள், மதுரை மாவட்டத்திற்கு 220 பேருந்துகள், கோவை மாவட்டத்திற்கு 120 பேருந்துகள் வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் விழுப்புரம் மாவட்டத்திற்கு 120 பேருந்துகள், கும்பகோணம் மாவட்டத்திற்கு 250 பேருந்துகள் மற்றும் நெல்லை மாவட்டத்திற்கு 130 பேருந்துகள் என மொத்தமாக ஆயிரம் பேருந்துகளை வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி! டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணைத் தலைவர் மரணம்!!

மேலும், மற்ற மாவட்டங்களில் கூடுதல் பேருந்து வசதி தேவைப்படும் பட்சத்தில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.