100 யூனிட் இலவச மின்சாரத்தில் மாற்றமா? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கிடையில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் மாற்றம் ஏற்படுமா? என்ற ஒரு கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் தமிழகத்தில் இருக்கக்கூடிய வீடுகள் மற்றும் விவசாயிகளின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது மத்திய அரசின் ஒப்புதலுடன் நடைப்பெற்று வருவதாக தெரிவித்து உள்ளார்.

கறியில் நெளிந்த புழு! ஷாக்கான வாடிக்கையாளர்… சென்னையில் பரபரப்பு!!

அதே போல் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்படுவதால் பொதுமக்களின் நலன் கருதி வருகின்ற 28.11.2022 திங்கட்கிழமை முதல் 31.12.2022 வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் இந்த தருணத்தினை பயன்படுத்திக்கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்து கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மக்களே உஷார்!! 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!!

மேலும், தற்போது பயன்பாட்டில் வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமுல் இல்லையென்றும் தற்போது நடைப்பெற்று வரும் மானியமானது தொடர்ந்து வழங்கப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.