Connect with us

நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விபரம்: வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு நிபந்தனையின்றி 100% உயர்வு!

property tax FB 1200x700 compressed

தமிழகம்

நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விபரம்: வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு நிபந்தனையின்றி 100% உயர்வு!

நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விபரம்: வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு நிபந்தனையின்றி 100% உயர்வு!

இன்றைய தினம் முதல் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் சொத்து வரியானது 50% முதல் 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள இதர நகராட்சி பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது .அதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி நகராட்சி பேரூராட்சிகளில் 600 சதுர அடிக்கும் குறைவான கட்டடங்களுக்கு 25% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சி பேரூராட்சிகளில் 601- 1200 சதுரடி வரை உள்ள கட்டிடங்களுக்கு 50% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

நகராட்சி, பேரூராட்சிகளில் 1201 முதல் 1800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 75% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் 1800 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

நகராட்சி பேரூராட்சிகளில் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு  எந்த ஒரு அளவும் இன்றி 100% சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top