அட்ராசக்க!! நாளை 100 “சார்பதிவாளர்” அலுவலகங்களுக்கு விடுமுறை!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதிநிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இனி வாரந்தோறும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என கூறியது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வருகின்ற சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் சார்பதிவாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த சூழலில் நாளை ( 22.10.2022) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதிநிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment