டக்குனு 100 கோடி ரூபா வசூல் தாண்டிய டாக்டர் திரைப்படம்! அதுவும் 25 நாளிலே!!

டாக்டர்

நம் தமிழகத்தில் தற்போது சில நாட்களாக தான் திரையரங்கில் திறக்கப்பட்டு திரைப்படம் வெளியிட அனுமதி அளிக்கப் பட்டுள்ளன. இதனால் மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் டாக்டர் திரைப்படம் வெளியானது.டாக்டர்

இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். பொதுவாக  திரைப்படத்தில் அதிகமாக பேசிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் மாறுபட்ட விதத்தில் தோன்றியது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இத்தகைய டாக்டர் திரைப்படத்தினை நெல்சன் இயக்கினார். இதற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்தார்.

டாக்டர்  திரைப்படம் வெளியானது தொடங்கி திரையரங்கள் அனைத்திலும் சிரிப்புகள் கேட்ட வண்ணமாகவே காணப்பட்டது. டாக்டர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன், நடிகர் யோகிபாபு, நடிகை அர்ச்சனா உள்ளிட்ட பல காமெடி பட்டாளமே களமிறங்கி இருந்தது.

டாக்டர் திரைப்படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவை வெளியாகி 25 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியதும் குறிப்பிடத்தக்கது. இந்த 100 கோடி ரூபாய் வசூல் அனைத்தும் திரையரங்குகளில் வெளியாகி கிடைத்த வசூல் என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print