‘வெறும் 9 மாசத்துல 100கோடி தடுப்பூசி!’ இந்தியா சாதனை!! வியந்த உலகம்!!!

தற்போது மக்கள் மத்தியில் தடுப்பூசி மீது நம்பிக்கை உருவாகியுள்ளது. இதனால் இந்திய நாட்டில் வாழும் மக்கள் பலரும் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.தடுப்பூசி

இந்த கொரோனா தடுப்பூசியில் இந்தியா மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது. அதன்படி இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தொடங்கியது.

கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பல மாநிலங்களில் வினியோகிக்கப்பட்டு தொடர்ச்சியாக செலுத்தப்பட்டு வந்தது .100கோடி கொரோனா தடுப்பூசி என்ற மைல்கல்லை வெறும் ஒன்பது மாதங்களில் எட்டியுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் உத்தரகாண்டில் அதிகமாக முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டு இருந்தாலும் வெறும் 21 சதவீதம் பேர் மட்டுமே இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

51சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இந்தியாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. ஏற்கனவே நமது அண்டை நாடான சீனா முதல் நாடாக 100 கோடி டோஸ் தடுப்பூசி  செலுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment