காய்ச்சல் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் அதிகமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ஒரே நாளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனிடையே மழைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்க இருக்கும் நிலையில், இத்தகை காலநிலையில் குழந்தைகளுக்கு பொதுவாகவே காய்ச்சல் வருவதாகவும், கொரோனா காலக்கட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கையானது குறைவாகவே இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது குழந்தைகள் வெளியே செல்வதால் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையானது அதிகமாக இருப்பதாக மருத்துவ மனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சில குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.