100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 6000 ரூபாய் செலவு செய்த ஆட்டோ டிரைவர்!!

இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீரானது தெருக்களில் சாலையோரங்களில் அதிகமாக ஓடுகிறது, பல இடங்களில் சாலைகள் உடைக்கப்பட்டு காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.ஆட்டோ

இதுபோன்ற ஒரு சம்பவத்தால் ஆட்டோ ஓட்டுனர் 6000 ரூபாய் செலவு செய்த சம்பவம் இந்தியா முழுவதும் வைரலாக பரவுகிறது. கர்நாடகாவில் 100 ரூபாய் வாடகை சென்ற ஆட்டோ ஓட்டுனர் 6,000 ரூபாய் செலவு செய்து ஆட்டோவை மீட்டுள்ளார்.

சிக்மகளூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு செல்ல ஆட்டோ ஓட்டுனர் வினோத்தை ஒருவர் அணுகியுள்ளார். 100 ரூபாய் வாடகை பேசி பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். திடீரென்று பல்கலைகழகத்தின் கேட் அருகே உள்ள பாதையில் பெரும் பள்ளம் உருவானது.

இதனை தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அங்கு உள்ள ஒவ்வொருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆட்டோவால் எவ்வாறு வெளியே வர முடியும் என்ற குழப்பத்தில் இருந்த வினோத்திற்கு போலீசார் கிரைன் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

இதனால் அந்தக் கிரைன்க்கு வாடகையாக 6000ரூபாய் செலுத்த வேண்டி நிலைமை இருந்தது. 100 ரூபாய் சவாரிக்கு ஆசைப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார் ஆட்டோ ஓட்டுனர் வினோத்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment