10 முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு-அட்டவணையை வெளியிட்டார் அன்பில் மகேஷ்!

இந்த ஆண்டு கண்டிப்பாக 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்தான அட்டவணை இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 8.36 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

அதேபோல் தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை 9 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர் என்றும் அமைச்சர் அன்புமணி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment