“10 ரூபாய் நாணயம்”வாங்க மறுப்பு: வங்கி அதிகாரி 2 பேர் சஸ்பென்ட்!!

10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தில் வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும் என தெரிவித்தது.

டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க பரிந்துரை: ஐகோர்ட் கிளை உத்தரவு!

அதே போல் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் நபர்கள் மீது 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கூறியது. இந்த சூழலில் கடந்த மாதம் 29-ம் தேதி அப்துல் என்பவர் தன்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பெற்ற நாணயங்களை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் உள்ள தனது கணக்கில் செலுத்த சென்றுள்ளார்.

அப்போது வங்கியின் உதவி மேலாளராக இருக்கும் சிவா என்பவர் நாணயங்களை வாங்கி மறுத்துள்ளார். இதனால் சம்மந்தப்பட்ட வங்கிக்கு ரிசர்வ் வங்கி அழுத்தம் கொடுத்தாக கூறப்படுகிறது.

தரம் இல்லாத ஏலக்காய்! சபரிமலை கோயிலில் திடுக்கிடும் தகவல்..!!

அதன் ஒரு பகுதியாக துறைரீதியான நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் உதவி மேலாளரும், காசாளரும் 180 நாட்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.