இன்னும் 2 நாட்களில் 10 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்! பள்ளி தாளாளருக்கு நோட்டீஸ்;
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கத்தில் இரண்டாம் வகுப்பு மாணவர் பரிதாபமாக வேன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார், இதனால் வேன் ஓட்டுநர் மற்றும் பெண் ஊழியர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஏனென்றால் வேனில் இருந்த மாணவ மாணவிகள் சத்தம் கொடுத்துக் கேட்காமல் வேலை நடந்தால் அந்த மாணவர் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி தாளாளருக்கு தற்போது போலீஸ் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதன்படி சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 கேள்விகளுக்கு இரண்டு நாட்களில் விளக்கமளிக்க பள்ளி தாளாளர் ஜெய சுபாஷுக்கு காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவன் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்கு அனுப்பிய நோட்டீசை சுட்டிக்காட்டி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் இரண்டு நாட்களில் கொடுக்கப்பட்டுள்ள 10 கேள்விகளுக்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
