அரபிக் கடலில் அத்துமீறி நுழைந்த 10 பாகிஸ்தானியர்கள்! உடனே கைது செய்த கடலோர காவல்படை!!

இந்திய நாட்டின் எல்லைக்குள் அவ்வப்போது அண்டை நாட்டு தீவிரவாதிகள் நுழைவார்கள். அவர்களை கண்காணிப்பதற்காக எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் குவிந்து காணப்படுவார்கள். இவை பெரும்பாலும் தரைப்பகுதியில் தான் காணப்படுகிறது. ஆனால் தற்போது 10 பாகிஸ்தானியர் கடல் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

இந்திய எல்லைக்குள் கடலில் படகு மூலமாக வந்த 10 பாகிஸ்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அரபிக்கடலில் இந்திய பகுதிக்குள் படகில் வந்த 10 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் எல்லையை கடந்து யாஸீன் என்ற படகில் வந்த 10 பேரையும் கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஆங்கிட் என்ற கடலோர காவல்படை கப்பல் ரோந்து சென்றபோது பாகிஸ்தான் படகு ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய பகுதிக்குள் சுமார் ஏழு மைல் தூரம் வரை ஊடுருவிய பாகிஸ்தான் படத்தில் இருந்து 2 டன் மீன்கள் கைப்பற்றப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் 600 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான பத்து பாகிஸ்தானியர்களும் படகுடன் அழைத்துவரப்பட்டு போர்பந்தரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் படைகள் வந்து மும்பையில் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 16 ஆண்டுகள் முடிந்த நிலையில் அரபிக்கடலில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment