News
10ல் ஒன்று பெண்களுக்கு மட்டும்! தமிழ்நாட்டில் 10 புதிய அரசு கலைக் கல்லூரிகள்!
முன்னொரு காலத்தில் நான் தமிழகத்தில் இன்ஜினியரிங் மோகம் அதிகமாக இருந்தது. அதன்பின்னர் இன்ஜினியர் படிப்பு மீது மாணவர்களுக்கு நாட்டம் குறைந்து காணப்பட்டது. தற்போது பல இன்ஜினியரிங் கல்லூரிகள் தமிழகத்தில் மாணவர்கள் வரத்து இன்றி காணப்படுகின்றன.
ஏனென்றால் மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பை விட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மீது அதிகம் நாட்டம் கொண்டு படிக்கின்றனர். அவர்களுக்கு பிரயோஜனம் அளிக்கும் வகையில் தமிழகத்தில் இன்று புதிய 10 கலை கல்லூரிகள் தொடங்க அனுமதிக்க பட்டதாக கூறியுள்ளது.
இவை தமிழ்நாட்டில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 10 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்க உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைகிறது. நெல்லை மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய கலைக்கல்லூரி தொடங்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கலைக் கல்லூரி தொடங்கப் படுகிறது.
