Connect with us

தெலுங்கானாவில் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் –முதல்வர் அறிவிப்பு!

News

தெலுங்கானாவில் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் –முதல்வர் அறிவிப்பு!

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த போது தெலுங்கானா மாநிலம் பிறந்தது. அதன் முதலமைச்சராக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சந்திரசேகர ராவ் நீடித்து வருகிறார். 

இவர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கிறார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் தனது சொந்த ஊரான சிந்தமடகாவிற்கு சென்றிருந்தார். 

5981a31a8cf4b400a5852f550ee46b2c

அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், சாதி, மத பேதம் இல்லாமல் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படும். 

இதற்காக விரைவில் அரசாணை வெளியிடப்படும். இதன்மூலம் சுமார் 2,000 குடும்பங்கள் பயன்பெறுவர். ரூ.10 லட்சம் மூலம் சொந்தமாக கோழிப் பண்ணை, பால் பண்ணை அமைத்துக் கொள்ளலாம். 
வேளாண் தொழில், அறுவடை இயந்திரங்கள் கொள்முதல், சிறுதொழில், ஆட்டோ வாங்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட பலன்களை பெறலாம். சிந்தமடகாவின் மேம்பாட்டிற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

சித்திபேட் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.50 லட்சம் மேம்பாட்டு நிதி அளிக்கப்படும். சிந்தமடகாவை பொன் விளையும் பூமியாக மாற்றுவதே எனது விருப்பம் என்று தெரிவித்தார். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top