பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி: முதல்வர் புஷ்கர் சிங் இரங்கல்..!!

வட மாநிலங்களை பொறுத்தவரியில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் மழை பெய்து வருவதால் பனி சரிவு ஏற்படுகிறது.

அந்த வகையில் உத்தரகாசி மாவட்டத்தில் இருக்கும் திரௌபதி மலையில் பனிச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 20க்கும் மேற்பட்ட மலையேறும் பயிற்சியாளர்கள் பனிசரிவில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேரை தேடும் பணியில் மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாக அம்மாநில முதல்வர் புஷ்ங்க சிங் ட்வீட் செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment