News
கோவிலுக்குள் புகுந்த 10அடி நீள பாம்பு: பொதுமக்கள் அதிர்ச்சி

10 அடி நீளத்தில் உள்ள நல்ல பாம்பு ஒன்று கோவிலுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்
ஒரிசா மாநிலத்திலுள்ள காஞ்சம் என்ற மாவட்டத்தில் உள்ள நந்திகேசுவரர் என்ற கோவிலில் திடீரென 10 அடி நீள பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்
இரவு மணி 10.30 மணி நேரத்தில் பாம்பு ஒன்று கோவிலுக்குள் புகுந்ததாக வந்த தகவலை அடுத்து உடனடியாக வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் நிபுணர்கள் ஆகியோர் அந்த கோவிலுக்கு சென்றனர்
கோவிலுக்குள் சென்ற அவர்கள் நல்ல பாம்பை பத்திரமாக பிடித்து அதன் பின்னர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 10 அடி நீள நல்ல பாம்பு ஒன்று கோவிலுக்குள் புகுந்த சம்பவம் அந்த கிராமத்து மக்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
