Connect with us

10 மாவட்ட மக்கள் எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம்

10 மாவட்ட மக்கள் எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்

608543c4b261285ef26e7c0abd01d81c

தமிழகத்தில் மழை நிலவரங்கள் குறித்து தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் 10 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

மேலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 11ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்,  தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஒரு சில உள் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top