10.5% உள் இட ஒதுக்கீடு ஒரு தேர்தல் நாடகம்! நீதிமன்றத் தீர்ப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு!!

கமல்

இன்றைய தினம் காலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருந்தது. என்னவென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது குறித்து பலரும் வழக்கு தொடுத்தனர்.வன்னியர்

இந்த வழக்கு பல மாதங்களாக நீடித்து வந்த நிலையில் தற்போது இன்று காலை இதற்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதன்படி வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்தது.

இதனால் பாமகவினர் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் அடுத்த செஞ்சியில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மத்தியில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வரவேற்பு அளித்தார். இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் இது குறித்து தங்களது கருத்தினை கூறியுள்ளார்.

அதன்படி வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு தேர்தல்கால மோசடி நாடகம் என்று விமர்சித்துள்ளார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை கடுமையான விமர்சனங்கள் உடன் நீதிமன்றம் இன்றைய தினம் ரத்து செய்துள்ளது என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print