10 வருடங்களுக்கு பிறகு சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கும் சச்சின் பட நடிகை!!! எந்த மொழியில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாய்ஸ், சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம் ,உத்தம புத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவர் தெலுங்கு இந்தியிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சினிமாவில் நடிப்பதற்கு பிரேக் கொடுத்தார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது.

Sachien

 

தற்போது பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜெனிலியா சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக வேத் என்ற மராத்தி மொழி மற்றும் கன்னட படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜெனிலியா சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதே நேரம் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளா. அதோடு தனது நடிப்பை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு விரும்புவதாக கூறியுள்ளார்.

vijay

தொடர்ந்து பேசிய ஜெனிலியா நான் நடிப்பதற்கு தன்னுடைய கணவர் ஆதரவாக இருப்பதாகவும், இதற்காக நேர அட்டவணையை திட்டமிட்டு, நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது அவர் வீட்டில் வேலைகளை பார்த்து கொள்வார் என தெரிவித்து உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.