10 கோவில்களில் இலவச பிரசாதம்;; அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார் !!
சிதம்பரம் நடராஜன் கோவிலில் தீட்சதர்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையேன முரண்பாடுகள் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தினை அவர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக பழனி, திருத்தணி, சமயபுரம், மருத்துவமலை, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி, சென்னை வடபழனி முருகன் கோவில் ஆகிய கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை வடபழனி முருகன் கோவிலில் இத்திட்டத்தினை நேரடியாக தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு பிற இடங்களில் காணொளி வாயிலாக இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
தலா 40 கிராம் எடையில் பொங்கல், லட்டு, புளியோதரை, சுண்டல் ஆகிய 4 முதல் 6 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜன் கோவிலில் தீட்சதர்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையேன முரண்பாடுகள் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கூடிய விரைவில் தீட்சதர்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையேன முரண்பாடுகள் தீர்க்க குழு அமைக்கப்படும் என இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
