
தமிழகம்
OMG..! குரூப் 2 தேர்வை 1.8 லட்சம் பேர் எழுதவில்லை.. வெளியான பகீர் தகவல்..
தமிழகத்தில் குரூப் 2, 2ஏ பிரிவுகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. நேர்முகத்தேர்வில் உள்ள 5 ஆயிரத்து 529 காலிப்பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரையில் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் 4,012 மையங்களில் 11,78,175 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் 8.30 மணி முதல் 8.59 மணி வரை தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தேர்வு நடைபெறும் பலத்தபாதுகாப்பு போடட்டுள்ளது. அதோடு தேர்வர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி கிடையாது.
இந்த சூழலில் குரூப் 2, 2ஏ பிரிவுகளுக்கான தேர்வு எழுத சுமார் 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இன்றைய தினத்தில் 9,94,878 பேர் மட்டும் தேர்வு எழுதியதாகவும் மற்றவர்கள் 1,83, 285 பேர் தேர்வு எழுதவில்லை என டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
