Connect with us

கோர விபத்து!! 3 மாணவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!!

accident 1

தமிழகம்

கோர விபத்து!! 3 மாணவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!!

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கம் அருகே பள்ளி வேன்,  கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்த 3 மாணவர்கள் உட்பட 10 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அதோடு விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளி வேன்-  கல்லூரி  பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவமானது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top