பட்ஜெட்டில் பெண்களுக்கு ₹1 ஆயிரம் நிதியுதவி – அண்ணாமலை

தமிழக அரசு 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தது, அதில் பெண்களுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மறைந்த தலைவர் சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆன நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக நினைவு கூர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 29,000 (28 மாத நிலுவைத் தொகை உட்பட) வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வருவாய் பற்றாக்குறை ரூ.3,000 கோடி குறைப்பு – நிதியமைச்சர்

மேலும் ‘தகுதியுள்ள பயனாளிகளுக்கு’ மட்டுமே தொகை வழங்கப்படும் என, தி.மு.க.,வினர் கூறி, திட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பக்கூடாது. 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.