ஹரித்துவார் மாநாட்டில் முஸ்லீம்களுக்கு எதிரான பேச்சு- உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவிப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் ஹரித்துவாரில் கடந்த மாதம் தர்ம சன்சத் என்ற மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய துறவிகள் சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக புகார் எழுந்தது.

மியான்மரில் நடந்ததை போன்ற இன அழிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், 100 வீரர்கள் கிடைத்தால், 20 லட்சம் பேரை கொன்று குவிக்கலாம் எனவும் பேசியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

அவர்களைக் கொல்ல போலீஸ், ராணுவம், இந்துக்கள் என அனைவரும் அணி திரள வேண்டும். வெறும் கத்தி போதாது, பெரிய பெரிய ஆயுதங்கள் வேண்டும் என பேசியதாக கூறப்பட்டது.

இந்த பேச்சுக்கள் சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

இவ்விவகாரத்தை பேச்சாக எடுத்துக்கொள்ள கூடாது அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இவ் விவகாரம் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment