‘விடுதலை’ படப்பிடிப்பில் விபத்து.. வெறும் இரங்கல் மட்டும் தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் பலியானதை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இரங்கல் அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் ‘விடுதலை’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் காலமானது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஆக்ஷன் காட்சி எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் எதிர்பாராத விதத்தில் காலமானதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் பணியாளர் பாதுகாப்புக்காக ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து இருந்தும் ஸ்டண்ட் நடிகர் சுரேஷை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவரது இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாதது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்டண்ட் நடிகர் சுரேஷின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்டண்ட் நடிகர் சுரேஷ் குடும்பத்தினருக்கும் தயாரிப்பு நிறுவனம் நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் படக்குழுவினர்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...