தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன், சின்னத்திரை மூலம் தனது திரைப்பயணத்தை தொடக்கி விடாமுயற்சியின் வெற்றியாக தற்போழுது வெள்ளித்திரையில் அஜித், விஜய்க்கு இணையாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 20வது படமான பிரின்ஸ் படத்தின் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் ரூ. 23 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இந்நிலையில் சமீபத்தில் மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் டைட்டில் மாவீரன் ஆகும். இந்த படத்தை சக்தி டாக்கீஸ் தயாரிக்கயுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் அவர் ராணுவ வீரனாக நடிக்க உள்ளதாகவும் மேலும் மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் பேசியதாக தகவல் கிடைத்துள்ளது.
பொதுவாக தற்போழுது வரும் படங்களில் மல்ட்டி ஸ்டார்கள் இணைந்து நடிப்பது வளக்கமாகியுள்ளது, அடுத்ததாக விஜய் சேதுபதி அவர்களும் அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்,
தனுஷின் நானே வருவேன் படத்தின் புது போஸ்டர் இதோ!
சமீபத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மெகா ஹிட் ஆன விக்ரம் படத்தில் இருந்து சிறந்த வில்லனாக அவர் முன்னேறியுள்ளார், அதனால் சிவகார்த்திகேயனும் அவர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தால் படம் சிறப்பாக அமையும் என எதிர்பார்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களான இவர்கள் இருவரும் இணைந்து ஒரே திரையில் வருவது மக்கள் மனதில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.